×

#BREAKING : ரூ.1 கூடுதலாக மதுபானத்திற்கு வசூலித்தாலும் பணியிடை நீக்கம்..! அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை!

 

“23 ஆண்டுகளாக டாஸ்மாக் மதுபான கடையில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு 1-1-2026 முதல் ஊதிய உயர்வு அறிவிக்கப்படுகிறது. மேற்பார்வையாளர்களுக்கு 33 ஆயிரத்து 23 ரூபாயும், விற்பனையாளர்களுக்கு 30,284 ரூபாயும், உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.28,680 உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் ஆண்டொன்றிற்கு அரசுக்கு ஏற்படும் செலவு ரூ.486.90 கோடி' என அமைச்சர் விக்னேஷ் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

மேலும் டாஸ்மாக் -  ரூ.1 கூடுதலாக வசூலித்தாலும் பணியிடை நீக்கம் செய்யப்படும் என எச்சரித்தார் .

கள்ளச்சாராயத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக மதுவிலக்கு அமலாக்க பிரிவிற்கு ரூபாய் 2 கோடியே 58 லட்சம் மதிப்பீட்டில் நவீன உபகரணங்கள் மற்றும் புதிய வாகனங்கள் வழங்கப்படும் - அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு

கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு, சிறைத் தண்டனை பெற்று,விடுதலையாகி மனம் திருந்தியவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மறுவாழ்வு நிதி ரூ.50,000/-லிருந்து ரூ. 1,00,000/-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

மெத்தனால் கட்டுப்பாடு மற்றும் போலி மதுபானம் /கள்ளச்சாராயத் தயாரிப்புக்காக மெத்தனால் மற்றும் மெத்தனால் சார்ந்த மூலப்பொருட்களை சட்ட விரோதமாக பயன்படுத்துவது மற்றும் திசை திருப்பப்படுவதைத் தடுக்கும் வகையில் புதிய மெத்தனால் பயன்பாட்டு கொள்கை உருவாக்கப்படும்.


உரிமம் ரத்து, ஒப்படைப்பு, மாற்றம் உள்ளிட்ட பணிகளை வெளிப்படையாக மேற்கொள்ள e Kalaal தளத்தில் புதிய தொகுதிகள் உருவாக்கப்படும்.
மேலும், FL2, FL3,FL3A, FL3AA உரிமம் புதுப்பித்தல் மற்றும் மதுபான இருக்குமதி, பீர் ஏற்றுமதி அனுமதிக்கான செயலிகள் 'e-Kalaal' தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு முழுமையாக மின்னணுமயமாக்கப்படும்.இதற்காக ரூ.1.69 கோடி ஒதுக்கப்படும்.

கள்ளச்சாராயம், போலி / கலப்பட மதுபானங்கள் மற்றும் போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து இளைஞர்கள் மற்றும் பொது மக்களுக்கு சமூக ஊடகங்கள் வாயிலாக ரூ.2 கோடியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் மற்றும் போதைப் பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை நடத்துவதற்கான நிதி ரூ. 5 கோடியிலிருந்து
ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.


கள்ளச்சாராயம் காய்ச்சும் நிகழ்வுகளைத் தடுக்கும் பொருட்டு, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு திறம்பட செயல்படுவதற்காக 10 நான்கு சக்கர இயக்கத் திறன் கொண்ட அனைத்து நிலப்பரப்பு வாகனங்கள் (All Terrain Vehicles) மற்றும் 10 உயர் தெளிவுத்திறன் கொண்ட கண்காணிப்பு ட்ரோன்கள் (Surveillance Drones) மற்றும் அத்தியாவசிய செயல்பாட்டுக் கருவிகள் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்காக மொத்தம் ரூ.2.58 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.