#BREAKING : பட்டாசு ஆலை விபத்து - தலைமறைவாக இருந்த உரிமையாளரை கைது செய்த தனிப்படை!
தமிழகத்தையே உலுக்கிய கட்டனார்பட்டியில் வனஜா பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரித்த நிலையில் பட்டாசு ஆலை உரிமையாளரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் வனஜா பட்டாசு ஆலையில் கடந்த 19ம் தேதி வெடி விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்தில் அங்கிருந்த அறைகள் சிதறின. பட்டாசு ஆலை விபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.சில தினங்களுக்கு முன்பு பட்டாசு ஆலை உரிமையாளரின் கணவர் முத்துமாணிக்கம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். மேலும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த உறவினர்கள் முத்துராஜ், வைரமுத்து உள்ளிட்ட மூன்று பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில், வனஜா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 25 பேர் உயிரிழந்த வழக்கில், கடந்த 8 நாட்களாக தலைமறைவாக இருந்த பட்டாசு ஆலையின் உரிமையாளர் ஈஸ்வரியை போலீசார் கைது செய்தனர். இவர் கோவையில் தனது உறவினர்கள் வீட்டில் பதுங்கி இருந்தபோது தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர்.