#BREAKING : பிரபல பாடகி ஆஷா போஸ்லே கவலைக்கிடம்... மருத்துவமனையில் அனுமதி..!!
Apr 11, 2026, 21:54 IST
பிரபல பின்னணி பாடகியான ஆஷா போஸ்லே எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக பல்வேறு இந்திய மொழி திரைப்படங்களில் பாடி இருக்கிறார்.
இரண்டு தேசிய திரைப்பட விருதுகள், பதினெட்டு மகாராஷ்டிர மாநில விருதுகள், சிறந்த பின்னணி பாடகிக்கான ஏழு பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார்.
இந்தியத் திரையுலகின் தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக திகழும் ஆஷா போஸ்லே 1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 12,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனையும் படைத்திருக்கிறார்.
இந்நிலையில்,புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லேவுக்குத் திடீர் மாரடைப்பு (cardiac arrest) ஏற்பட்டதையடுத்து, அவர் மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.