☰
×

#BREAKING : நகை வாங்குவோர் ஷாக்..!! ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை..!!

 

தங்கம் விலை கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கணிசமாக குறைந்திருக்கிறது. இந்த விலை குறைவு தொடருமா? என்றால் அதனை 100% கணிக்கமுடியாத நிலை தான் இருக்கிறது. எனினும், விலை குறைந்திருக்கும்போதே தங்களால் இயன்ற தங்கத்தை வாங்கி சேர்த்துவிட வேண்டும் என சிலர் நினைக்கின்றனர்.

தங்கத்தின் விலை நேற்று (நவம்பர் 26) கிராமுக்கு ரூ. 120 அதிகரித்து ரூ. 11,540க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு ரூ. 60 அதிகரித்து ரூ. 11,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ. 960க்கு அதிகரித்து ஒரு சவரன் ரூ. 92,320க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ. 480 அதிகரித்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ. 92,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து, சவரனுக்கு மொத்தம் ரூ.1,840 அதிகரித்துள்ளது.

காலையில் கிராமுக்கு ரூ.60-ம் சவரனுக்கு ரூ.480-ம் உயர்ந்த நிலையில், மாலையில் கிராமுக்கு ரூ.170-ம் சவரனுக்கு ரூ.1,360-ம் மீண்டும் உயர்ந்துள்ளது.

இதன்படி, சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.11,770-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.94,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.170கும் ஒரு கிலோ ரூ.1,70,000க்கும் விற்கப்படுகிறது.