#BREAKING : 100 வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்..!
2026 தேர்தல் நெருங்கி வருவதால், மாநில அரசியல் சூடுபிடித்து வருகிறது. தமிழகத்தில் இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் ஆகிய கட்சிகள் மத்தியில் நான்கு முனை போட்டி உருவாகியுள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தல் தயாரிப்புகளை வேகமாக முன்னெடுத்து வருவதால், அரசியல் சூழல் இன்னும் தீவிரமடைந்துள்ளது. இதனால் அரசியல் களம் சூடுபிடித்து உள்ளது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி இந்த முறைவும் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது. கட்சி தொடங்கிய காலத்திலிருந்து இதுவரை எந்த தேர்தலிலும் யாருடனும் கூட்டணி அமைக்காமல், எப்போதும் தனியே போட்டியிடுவது என்ற அதே நிலைப்பாட்டை தொடர்ந்து கொண்டு வருகிறது.
நாம் தமிழர் கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் பெண்களுக்கு சமமான வாய்ப்புகளை வழங்கும் கொள்கையை தொடர்ந்து பின்பற்றி வருகிறது. எடுத்துக்காட்டாக, 10 இடங்களில் போட்டியிடும் சூழலில், 5 ஆண் வேட்பாளர்களும் 5 பெண் வேட்பாளர்களும் போட்டியிடுவர். அதேபோல வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும், 234 தொகுதிகளில் சரியாக பாதி இடங்களில் பெண்கள் போட்டியிடுவார்கள் எனக் கட்சி அறிவித்துள்ளது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட உள்ள 234 வேட்பாளர்களையும் ஒரே நிகழ்வில் அறிமுகப்படுத்தும் மக்களின் மாநாடு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திருச்சியில் நடைபெறும் என அக்கட்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழக சட்டசபையில் போட்டியிட உள்ள 100 வேட்பாளர்கள் அடங்கிய முதல் கட்ட பட்டியலை அக்கட்சியின் தலைவர் சீமான் இன்று வெளியிட்டார்.