×

#BREAKING : கான்கிரீட் வீடுகள் கட்ட ரூ.5 லட்சம் மானியம்..! 

 

கான்கிரீட் வீடுகள் கட்ட இதுவரை அரசு ரூ.3.10 லட்சம் கொடுத்த நிலையில் தற்போது ரூ.5 லட்சமாக உயர்வு என அறிவிப்பு நடப்பு ஆண்டில் ரூ.3500 கோடியில் 70 ஆயிரம் கான்கிரீட் வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும்.வெற்றி வீடு திட்டம்- நடப்பு ஆண்டில் ரூ.3500 கோடியில் 70,000 கான்கிரீட் வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும்.

கான்கிரீட் வீடு கட்ட ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார். பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறைக்கு ரூ.8,852 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வெற்றி வீடு திட்டம் அறிமுகம் செய்யப்படும். முதல் ஆண்டிலேயே 70,000 வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும். ரூ.3,500 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.

 கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அலையாத்தி காடுகள் திட்டம் செயல்படுத்தப்படும். நகர்ப்புறத்தை ஒட்டிய கிராமங்களில் மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

புதிய வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ. 12,646 கோடி ஒதுக்கீடு. நெய்தல் மீட்சி இயக்கத்திற்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

மகளிருக்காக சிங்கப்பெண்கள் வலிமைப்படுத்தும் திட்டம் தொடங்கப்படும். இதில் ரூ.5 லட்சம் முதலீட்டு மானியமாக வழங்கப்படும். இந்த ஆண்டு மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு ரூ. 38,000 கோடி வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்படும். ஊரக வளர்ச்சி துறைக்கு ரூ.39,609 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் மரியவில்சன் அறிவித்தார்.