#BREAKING : நீட் தேர்வுக்கு எதிராக தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்..!
சட்டப்பேரவையில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தனித் தீர்மானம் முன்மொழிந்து பேசிய மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ்,
நீட் தேர்வு சமூக நீதி, சமத்துவம், மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று அமைச்சர் அருண்ராஜ் கூறினார். தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள், கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களுக்கு பெரும் பாதிப்பாக நீட் தேர்வு உள்ளது. நீட் தேர்வு நாடு முழுவதும் மாணவர்களின் நம்பிக்கையை இழந்துள்ளது. நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும் என்று மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.
“ஏற்றத்தாழ்வுகளை நீட் தேர்வு அதிகரித்துள்ளது. நீட் தேர்வு சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்கு பதிலாக அதிகரித்துள்ளது. நீட் தேர்வு நடைமுறையால் தனியார் பயிற்சி மையங்களே பலன் பெறுகின்றன. கிராமப்புற அரசு பள்ளி மாணவர் விவசாயி பிள்ளைகள் அதே அளவிலான பயிற்சியை பெற முடியுமா?” என்று அருண்ராஜ் கேள்வி எழுப்பினார். சமூக நீதியை பாதிக்கும் சமவாய்ப்பை குறைக்கும் எந்த ஒரு தேர்வையும் ஏற்க முடியாது என்பதே நம் கொள்கை என்று மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் கூறினார். பேரவையின் ஒருமித்த குரலை ஒன்றிய அரசு மதிக்க வேண்டும் மாநில உரிமையை மதிப்பதே கூட்டாட்சி கொள்கை என்று அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.
நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசு தனி தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்தார். சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட கல்வியை நடைபெறப் படுத்திய மாநிலம் தமிழ்நாடு என்று அருண்ராஜ் கூறினார். மதிப்பெண் அடிப்படையிலான செயற்கையில் சமூகத்தில் பின்தங்கியவருக்கு மருந்து கல்வி கிடைத்தது சமூகநீதி சமவாய்ப்பு 12 வருட பள்ளிக்கல்வியை மதிக்கும் சேர்க்கையால் மருத்துவத்தில் முன்னேற்றம் இருந்தது என்று அமைச்சர் அருண்ராஜ் கூறினார். நீட் தேர்வு முறையை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் 12 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள இயலும் நீட் வினாத்தாள் கசிவு முறைகேடுகளால் மாணவர்கள் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் மாணவர்களின் நம்பிக்கையை நீட் தேர்வு இழந்துள்ளது நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும் என்று மருத்துவ துறை அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.
நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய அமைச்சர் அருண்ராஜ், இத்தேர்வு முறையால் கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை விரிவாகக் பட்டியலிட்டார்.
- சமத்துவமின்மை மற்றும் சமூக நீதிப் பாதிப்பு: நீட் தேர்வு என்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் சமத்துவக் கோட்பாடு, சமூக நீதி மற்றும் மாநிலங்களின் தன்னாட்சி உரிமைகளுக்கு முற்றிலும் எதிராக உள்ளது. இது நாடு தழுவிய அளவில் மாணவர்களுக்கான சம வாய்ப்பைப் பறிக்கிறது.
- பயிற்சி மையங்களின் ஆதிக்கம்: இத்தேர்வு முறை சாதாரண மாணவர்களுக்குப் பயனளிப்பதற்குப் பதிலாக, லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் தனியார் பயிற்சி மையங்கள் (Coaching Centres) பெருகுவதற்கே வழிவகுத்துள்ளது.
- தமிழ்வழி மாணவர்களின் பாதிப்பு: மாநிலப் பாடத்திட்டத்திலும், தமிழ் வழியிலும் பயிலும் கிராமப்புறத்தைச் சேர்ந்த ஏழை எளிய மாணவர்கள் மருத்துவக் கல்வியைப் பெறுவதற்கு நீட் தேர்வு பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது.
எனவே, மருத்துவச் சேர்க்கையில் நீட் தேர்வு முறையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்றும், மாநிலங்களின் கல்வி உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்றும் இத்தீர்மானத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டது.நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய அமைச்சர் அருண்ராஜ், இத்தேர்வு முறையால் கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை விரிவாகக் பட்டியலிட்டார்.
- சமத்துவமின்மை மற்றும் சமூக நீதிப் பாதிப்பு: நீட் தேர்வு என்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் சமத்துவக் கோட்பாடு, சமூக நீதி மற்றும் மாநிலங்களின் தன்னாட்சி உரிமைகளுக்கு முற்றிலும் எதிராக உள்ளது. இது நாடு தழுவிய அளவில் மாணவர்களுக்கான சம வாய்ப்பைப் பறிக்கிறது.
- பயிற்சி மையங்களின் ஆதிக்கம்: இத்தேர்வு முறை சாதாரண மாணவர்களுக்குப் பயனளிப்பதற்குப் பதிலாக, லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் தனியார் பயிற்சி மையங்கள் (Coaching Centres) பெருகுவதற்கே வழிவகுத்துள்ளது.
- தமிழ்வழி மாணவர்களின் பாதிப்பு: மாநிலப் பாடத்திட்டத்திலும், தமிழ் வழியிலும் பயிலும் கிராமப்புறத்தைச் சேர்ந்த ஏழை எளிய மாணவர்கள் மருத்துவக் கல்வியைப் பெறுவதற்கு நீட் தேர்வு பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது.
எனவே, மருத்துவச் சேர்க்கையில் நீட் தேர்வு முறையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்றும், மாநிலங்களின் கல்வி உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்றும் இத்தீர்மானத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டது.
நீட் விலக்கு தீர்மானத்தை எதிர்த்து பாஜக உறுப்பினர் போஜராஜன் வெளிநடப்பு செய்த நிலையில், எந்த தேர்வுக்கும் நுழைவுத்தேர்வு இருக்கக் கூடாது. பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான செயற்கையை உறுதி செய்ய வேண்டும். அரசு கொண்டுவந்துள்ள தனி தீர்மானத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது என தளி ராமச்சந்திரன் ஆதரவு தெரிவித்தார். மற்ற கட்சிகளும் இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளித்த நிலையில் நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
நீட் விலக்குக்கான தீர்மானம் முன்மொழிந்த அமைச்சர் @arunraajkg 🔥
— priya (@PriyankaSmile01) August 11, 2026
நீட் தேர்வு எழுதாமல் மருத்துவச் சேர்க்கை முறைப்படி மருத்துவ படிப்பில் சேர்ந்த மருத்துவர் என்ற முறையில் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன் - @arunraajkg ❤️ pic.twitter.com/17AI9RIEO8