☰
×

#BREAKING : ரெட் அலர்ட் - செல்போனில் ஒலித்த எச்சரிக்கை அலாரம்..!!

 

சென்னைக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை செல்போன்களில் ஒலித்த எச்சரிக்கை அலாரம்.

சென்னையில் இன்று (அக்.18) அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், நகருக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கையை விடுத்துள்ளது. இத்துடன் நிலவும் தீவிர வானிலை மாற்றங்கள் காரணமாக, செங்கல்பட்டு, திருவள்ளூர், நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், அவசியமின்றி வெளியே செல்வதை தவிர்க்கவும் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

வானிலை மையம் சென்னைக்கு இன்று ரெட் அலர்ட் விடுத்த நிலையில், செல்போன்களில் ஒலித்தது எச்சரிக்கை அலாரம்.

பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்; அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தல்..

Extremely severe alert

சென்னையில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும். அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.- TNSDMA