#BREAKING : ரதன் பண்டிட் நியமனம் ரத்து...! உத்தரவை திரும்பப் பெற்றது தமிழ்நாடு அரசு..!
May 13, 2026, 13:02 IST
தமிழக முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரான ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலை, கட்சியின் செய்தித் தொடர்பாளராக அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் நியமித்தது. இதையடுத்து விஜய் தமிழ்நாடு முதல்வராக பதவியேற்ற பிறகு ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலை முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
இந்த நியனத்திற்கு தவெக ஆட்சியமைக்க ஆதரவு அளித்த காங்கிரஸ், சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்களே கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் முதல்வர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக ரதன் பண்டிட்டை நியமித்ததை தமிழக அரசு திரும்பப் பெற்றது.கடும் எதிப்புக்கிடையே ஜோதிடர் ரிக்கி ரதன் பண்டிட் வெற்றிவேல் நியமனத்தை திரும்ப பெற்றது தமிழ்நாடு அரசு.