#BREAKING : ராப் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு குண்டுக்கட்டாக கைது..!
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலகத்திற்கு முன்பாக கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற ராப் பாடகர் தெருக்குரல் அறிவு கைது.
நீட் தேர்வுக்கு எதிராகச் சென்னை தலைமைச் செயலகத்திற்குள் நுழைய முயன்ற பாடகர் 'தெருக்குரல்' அறிவு உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
டெல்லியில் மாணவர்கள் மற்றும் 'கரப்பான்பூச்சி கட்சி'யினர் போராடி வரும் நிலையில், தமிழகத்திலும் நீட் எதிர்ப்புப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இதனிடையே, போராடும் மாணவர்களுக்கு ஆதரவாகத் தலைமைச் செயலகம் வெளியே கோஷங்களை எழுப்பி, உள்ளே செல்ல முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டார்.
“நீட் தேர்வுக்கு எதிராக வட இந்தியாவே பற்றி எரிகிறது. அனிதா மரணத்தை தன் தங்கையின் மரணத்தோடு ஒப்பிட்டு பேசி வாக்கு கேட்ட விஜய் ஏன் அமைதியாக இருக்கிறார்? நான் அவரை சந்திக்க வேண்டும் விஜய் இதுகுறித்து பேச வேண்டும்”
முதல்வர் விஜய் இந்த விஷயத்தில் பேச வேண்டும் என பாடகர் அறிவு முழக்கம்...
தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பாடலை எழுதி இசையமைத்து பாடியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது #singerarivu #NEET #chennai #Arrest #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/jBRrKC0FEb
— News18 Tamil Nadu (@News18TamilNadu) July 21, 2026