#BREAKING : பெங்களூருவை வீழ்த்தியது ராஜஸ்தான் அணி..!!பெங்களூருவை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ சாதனை...!
கவுகாத்தியில் நடந்த போட்டியில் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் அணி, ரஜத் படிதர் கேப்டனாக உள்ள பெங்களூருவை எதிர்கொண்டது.இதுவரை பங்கேற்ற 3 போட்டியிலும் வெற்றி பெற்ற ராஜஸ்தான், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு அணி, 3 போட்டியில் 2ல் வென்று (1 தோல்வி) இருந்தது.
மழை காரணமாக 30 நிமிடம் தாமதமாக 'டாஸ்' நிகழ்வு நடந்தது. இதில் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக், பீல்டிங் தேர்வு செய்தார். பெங்களூரு அணியில் ஜேக்கப் டபி நீக்கப்பட்டு, அனுபவ ஹேசல்வுட் களமிறங்கினார். இந்நிலையில் மீண்டும் மழை வந்தது. ஒரு வழியாக ஒரு மணி நேரம், 10 நிமிட தாமதத்திற்குப் பின் போட்டி துவங்கியது.
பெங்களூரு அணி 20 ஓவரில் 201/8 ரன் எடுத்தது. ராஜஸ்தான் சார்பில் ஆர்ச்சர், பிஷ்னோய், பிரிஜேஷ் தலா 2 விக்கெட் சாய்த்தனர். வைபவ் அபாரம்...
202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய ராஜஸ்தான் அணி, ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி கடைசியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை தோற்கடித்து ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐபிஎல் போட்டியில் தோல்வியே சந்திக்காமல் ராஜஸ்தான் அணி 4-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.