×

#BREAKING : நாட்டையே உலுக்கிய புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு..!!

 

புதுச்சேரியில் கடந்த 2024ம் ஆண்டு, மார்ச் 2ம் தேதி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான கருணாஸ் என்பவர் குற்றவாளி என புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றம் தீர்ப்பு. தண்டனை விவரம் மே5ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தீர்ப்பு.

புதுச்சேரியில் டாடா ஏஸ் டிரைவரரக வேலை செய்து வருபவரின் 9 வயது மகள், அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2024 மார்ச் மாதம் 2ம் தேதி மதியம் 1 மணியளவில் வீட்டின் அருகில் விளையாடியபோது திடீரென மாயமானார். இதுகுறித்து பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். முத்தியால்பேட்டை போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்த நிலையில், சிறுமி முத்தியால்பேட்டை எல்லையை தாண்டி செல்லவில்லை என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதனால் சிறுமி நடந்து சென்ற பகுதியில் உள்ள வீடுகளின் செப்டிக் டேங்குகள், குடிநீர் தொட்டிகளில் தவறி விழுந்து இருக்கலாமா என போலீசாருக்கு சந்தேகம் எழுந்த நிலையில் அப்பகுதியில் உள்ள செப்டிக் டேங்க், குடிநீர் தொட்டிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாயமான குழந்தையை தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில் கூடுதலாக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. மேலும் பொதுப்பணித்துறை ஊழியர்களை கொண்டு அப்பகுதியில் உள்ள பெரிய வாய்கால்களிலும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சிறுமி அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள வாய்காலில் இறந்த நிலையில் சடலமாக கிடந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. சிறுமி உடலை சாக்கு பையில் போட்டு, கழிவுநீர் கால்வாயில் வீசி இருந்தனர். கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

போலீசார் நடத்திய விசாரணையில், சோலை நகரைச் சேர்ந்த கருணாஸ்,19, விவேகானந்தன்,56, ஆகியோர், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து கைது செய்த போலீசார், அவர்களை காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், கைதான சில நாட்களுள் சிறையின் கழிவறையில் விவேகானந்தன் துண்டால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது