×

#BREAKING :  'ஜனநாயகன்' வழக்கை வாபஸ் பெற்றது தயாரிப்பு நிறுவனம்..!

 

'ஜனநாயகன்' திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் மறுக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவினை, திரைப்பட தயாரிப்பு நிறுவனம் வாபஸ் பெற்றது. இதையடுத்து, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

விஜய்யின் கடைசிப் படமான 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கை சான்று மறுக்கப்பட்டதை எதிர்த்து படக்குழு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி, சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, தணிக்கை வாரியம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்பட்டது. மேலும், தனி நீதிபதியிடம் புதிய கோரிக்கையுடன் மீண்டும் அணுக உத்தரவிட்டது.

அதன்படி, மனுவை வாபஸ் பெறும் வகையில், படக்குழு தனி நீதிபதியிடம் மனு தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி ஆஷா, மனுவை திரும்பப் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்தார்.