☰
×

#BREAKING : 

தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு..!!

 

தமிழகத்தில் மகளிர் பயணம் என்ற பெயரில் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக செல்லும் திட்டம் நடைமுறையில் உள்ளது.

இந்த நிலையில் அக்டோபர் 2-ந்தேதி முதல் (காந்தி ஜெயந்தி) இந்த திட்டம் 'வெற்றிப்பயணம்' என்ற பெயரில் விரிவுபடுத்தப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.

அதன்படி, மாநகர மற்றும் நகர்ப்புறங்களில் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் மற்றும் புறநகர் சாதாரண அரசு பஸ்களிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்.

மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய சாதாரண அரசு பஸ்களிலும் இலவ மாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த இலவச பயண திட்டத்தால் தனியார் பஸ் உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சென்னை சேப்பாக்கத்தில் தமிழ்நாடு தனியார் பஸ் உரிமையாளர் ள் சங்கங்களின் சம்மேளன தலைவர் கே.தங்கராஜ், பொதுச்செயலாளர் டி.ஆர்.தர்மராஜ் ஆகியோர் கூட்டாக நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

கடந்த 104 ஆண் டுகளாக பயணிகளுக்கு சிறப்பான சேவையை அளித்து வருகிறோம். தனியார் பஸ் கட்டணம் கடந்த 2018-ம் ஆண்டு தமிழக அரசால் உயர்த்தி கொடுக்கப்பட்டது. அதன் பின்பு உயர்த்தப்படவில்லை.

டீசல், உதிரிபாகங்கள் விலை பல மடங்கு உயர்ந்த நிலையில் தனியார் பஸ் தொழி லில் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். இதற்கிடையே, டீசல் விலை உயர் வுக்கு ஏற்ப, கட்டணத்தை உயர்த்த, அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வழக்குகள் தொடரப்பட்டன.

கோர்ட்டு உத்தரவின் பேரில், கட்டண உயர்வு தொடர்பாக பஸ் உரிமையாளர்கள், பொது மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதன் பின்னர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தநிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள 'வெற்றிப்பயண' திட்டத்தால் மாநகர, நகர மற்றும் சாதாரண புறநகர் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிப்பார்கள். இதன்மூலம், தனியார் பஸ்கள் நஷ்டம் அடைந்து மேற்கொண்டு இயக்க முடியாத சூழ்நிலை உண்டாகும்.

மேலும், இத்தொழிலை சார்ந்துள்ள 3 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படும். அரசு போக்குவரத்து கழகங்களுக்கு இலவச மகளிர் பயணத் திட்டத்திற்காக அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது.

எனவே, தனியார் பஸ்களிலும் பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும். அதற்கு நஷ்டஈடாக தனியாருக்கும் மானியம் வழங்க வேண்டும்.

இதேபோல, பஸ் கட்டணத்தை மாற்றி அமைக்காவிட்டால் தொழில் முடங்கிவிடும் நிலையில் இருக்கிறோம். தற்போது 65 சதவீதம் நஷ்டத்தில் இயங்கி வருகிறோம்.

எனவே, தனியார் பஸ் தொழிலை காப்பாற்றும் வகையில் பஸ் கட்டணத்தை உயர்த்தியும், மகளிர் இலவச பயணத்தை எங்களுக்கும் விரிவுபடுத்தி மாற்றியமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி நாளை (புதன்கிழமை) ஒரு நாள் கவன ஈர்ப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். அதன்படி, இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை இந்த வேலை நிறுத்தம் நடைபெறும். எனவே நாளை தனியார் பஸ்கள் ஓடாது என்று அறிவித்தனர்.

இந்நிலையில், தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அமைச்சர்கள் உறுதியளித்ததை தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைக்கப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரை நேரில் சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கேட்டு கொண்டதன் அடிப்படையில் தனியார் பேருந்து உரிமையாளர்களின் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.