☰
×

#BREAKING : மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கு: பிரபல இன்ஸ்டா இன்புளூயன்சரான மீனாட்சி கைது !

 

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் திருப்பாலை பகுதியைச் சேர்ந்த இன்ஸ்டா இன்புளூயன்சரான மீனாட்சி என்ற இளம்பெண் மற்றும் பட்டதாரி இளைஞரின் தந்தை சுரேஷ் ஆகிய இருவரைத் தனிப்படைப் போலீசார் கைது செய்துள்ளனர்.மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் திருப்பாலை பகுதியைச் சேர்ந்த இன்ஸ்டா இன்புளூயன்சரான மீனாட்சி என்ற இளம்பெண் மற்றும்  சுரேஷ் ஆகிய இருவரை தனிப்படைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை பைபாஸ் சாலையில் புதிதாகத் தொடங்கப்பட்ட தனிஷ்க் ஜுவல்லரி நகைக்கடையில், கடந்த 12ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் மர்ம நபர், அங்கிருந்த ஏராளமான தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றார். இந்தச் சம்பவம் மதுரை மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதற்கட்ட விசாரணையில், முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கடையின் பின்பக்க வழியாகச் சென்று சுவர் மற்றும் கதவுகளை உடைத்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பிலான நகைப் பொருட்கள் கொள்ளை போயுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.

இந்த சூழலில் மாடக்குளம் பகுதியில் பட்டதாரி இளைஞர் அவர் குடும்பத்திற்கு சொந்தமான வயல்வெளிக்கு சென்று இரண்டு கட்டைப் பைகளில் ஆடைகளை தீயிட்டு எரித்ததாக அந்த பகுதியில் மாடு மேய்த்த நபர் தகவல் அளித்த நிலையில் தற்போது பட்டதாரி இளைஞர் ஆட்டோ மூலமாக வயல்வெளி பகுதிக்கு சென்று வருவது தொடர்பான சிசி டிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மதுரை பைபாஸ் சாலை தனிஷ்க் ஜுவல்லர்ஸ் நகைகடையில் பல கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த வழக்கில் பிரபல இன்ஸ்டா இன்புளூயன்சரான மீனாட்சி மற்றும் பட்டதாரி இளைஞர் சுரேஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களிடமிருந்து 5 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், தலைமறைவாக இருக்கும் நிஷாந்த் என்பவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.