#BREAKING :
பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு..!!
பெரம்பூரில் விஜய்யை எதிர்த்து பாமக சார்பில் திலகபாமா போட்டி..!!
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக-வுக்கு சேலம் (மேற்கு), தருமபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி, சோளிங்கர், மயிலாடுதுறை, திருப்போரூர், உத்திரமேரூர், ஜெயங்கொண்டம், போளூர், செஞ்சி, விருத்தாசலம், ரிஷிவந்தியம், காட்டுமன்னார்கோவில் (தனி), கீழ்வேளூர், பெரம்பூர், சேலம் (வடக்கு), அம்பத்தூர் ஆகிய 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பாமகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த 25 ஆம் தேதி அன்புமணி அறிவித்தார்.
அதில் கீழ்வேளூர் - ச.வடிவேல் ராவணன் (பாமக பொதுச் செயலாளர்), அம்பத்தூர் - என்.சேகர் (மாநில துணைத் தலைவர் - முன்னாள் நகர் மன்றத் தலைவர்), செஞ்சி - அ.கணேஷ் குமார் (இளைஞரணி தலைவர் - முன்னாள் எம்எல்ஏ) ஆகிய 3 பேரை வேட்பாளர்களாக போட்டியிட உள்ளனர்.
இந்த நிலையில் மீதமுள்ள 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அன்புமணி இன்று காலை அறிவித்தார். விருத்தாசலத்தில் தேமுதிக வேட்பாளர் பிரேமலதாவை எதிர்க்கும் பாமக வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
தற்போது 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டார்.
பெரம்பூர்- திலகபாமா
தருமபுரி- சவுமியா
உத்திரமேரூர்- மகேஷ்குமார்
ரிஷிவந்தியம்- செழியன்
காட்டுமன்னார்கோவில்- அன்பு. சோழன்
விருத்தாசலம்- தமிழரசி ஆதிமூலம்
சேலம் மேற்கு- கார்த்தி
பென்னாகரம்- பாடி வெ.செல்வம்
போரூர்- சி.ஆர்.பாஸ்கரன்
திருப்போரூர்- வழக்கறிஞர் கே.பாலு
ஜெயங்கொண்டம்- வைத்தி
சேலம் வடக்கு- சதாசிவம்
விக்கிரவாண்டி- சி.சிவக்குமார்
சோளிங்கர்- வழக்கறிஞர் க.சரவணன்
மயிலாடுதுறை- சித்தமல்லி ஏ.பழனிசாமி