#BREAKING : பாமகவிற்கு புதிய தலைவர் அறிவிப்பு!
சேலத்தில் ராமதாஸ் பாமகவின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது சேலம் ஐந்து ரோட்டில் உள்ள ரத்தினவேல் திருமண மண்டபத்தில் பாமகவின் இந்த பொதுக்குழு-செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதனையொட்டி அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்றைய பொதுக்குழுவில் தற்போதைய அரசியல் நிலவரம், கட்சி பிரச்சனை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும். மேலும் இக்கூட்டத்தின் முடிவில், 2026 சட்டமன்ற தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற அறிவிப்பும் வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,பாமகவின் புதிய தலைவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது
பாமக தலைவராக இருந்த அன்புமணியின் பதவி காலம் கடந்த 28ம் தேதியுடன் முடிந்ததால், புதிய தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி, கட்சியின் செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.