×

#BREAKING : 11 பயணிகளுடன் சென்ற விமானம் மாயம்..!!

 

இந்தோனேசியாவின் ஜாவா மற்றும் சுலவேசி ஆகிய இரு தீவுகளுக்கு இடையில் மலைப்பாங்கான பகுதியை ஏடிஆர் 42-500 விமானம் நெருங்கும்போது, இன்று (ஜன. 17) மதியம் 1.17 மணியளவில் தரைக் கட்டுப்பாட்டுடனான தொடர்பை இழந்தது. இந்த விமானத்தில் 11 பேர் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், விமானம் மாயமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேசியா நாட்டின் ஜாவா தீவில் உள்ள யோக்யகர்த்தா நகரில் இருந்து அந்நாட்டின் சுலவாசி தீவில் உள்ள தெற்கு சுலவாசி மாகாணத்திற்கு இன்று மதியம் சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 11 பேர் பயணித்தனர்.

இந்நிலையில், தெற்கு சுலவாசி மாகாணத்தின் மரோஸ் நகர் வான்பரப்பில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. மலைப்பாங்கான பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, மாயமான விமானத்தை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.