#BREAKING : 6வது முறையாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு..!
May 27, 2026, 09:41 IST
கடந்த மார்ச்சில் ஏற்பட்ட போரால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதுடன், விலை மிகவும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இன்றும் பெட்ரோல் விலை லிட்டருக்கு, 33 காசுகள்; டீசல் லிட்டருக்கு, 32 காசுகள் அதிகரித்தன.
அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.108.20க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.99.98க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த, 13 நாட்களில் மட்டும், 6வது முறையாக பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்துள்ளன.
பெட்ரோல், டீசல் விலைக்கு நிகராக சிஎன்ஜி விலையும் கிடுகிடு உயர்ந்துள்ளது;
சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.3.50 உயர்ந்து ஒரு கிலோ 95ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.