#BREAKING : திமுகவில் இணைந்தார் ஓ.பி.எஸ்..!
அ.தி.மு.க-வில் நீண்டகாலம் முக்கிய பொறுப்புகளை வகித்த ஓ.பி.எஸ்., 2017-ல் ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதலமைச்சராக பதவியேற்றார். அதற்குப்பின் நிலவிய அதிகாரப் போட்டியில் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலால், கடந்த 2022-ல் ஓ.பி.எஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, 'அ.தி.மு.க தொண்டர்கள் மீட்புக் குழு' என்ற பெயரில் தனிப்பயணம் மேற்கொண்ட அவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் சுயேச்சையாகப் போட்டியிட்டார்.
எனினும், எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க-வில் மீண்டும் இணைய வாய்ப்பில்லை என்பது உறுதியான நிலையில், ஓ.பி.எஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஏற்கனவே தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தி.மு.க-வில் இணைந்துவிட்டனர்.
இதற்கிடையில், சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓ.பி.எஸ்., தி.மு.க ஆட்சியை பாராட்டினார். தி.மு.க-வில் இணைவது குறித்த கேள்விக்கு "பொறுத்திருந்து பாருங்கள்" என பதிலளித்தது ஊகங்களை அதிகரித்தது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், சென்னையில் இன்று (பிப்.27) திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். இந்நிலையில், தியாகராய நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் இருந்து, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு, அமைச்சர் சேகர்பாபு காரில் ஓ. பன்னீர்செல்வம் வருகை தந்தனர்.
இந்த நிலையில்,முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயம் வந்த அவர், திமுகவில் இணைந்தார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்-ஐ மீண்டும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில், இந்த முடிவை ஓபிஎஸ் எடுத்துள்ளார்.