#BREAKING : பாஜகவின் தேசிய தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்பு..!
பா.ஜ., தேசிய தலைவராக, 2020 ஜனவரியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா நியமிக்கப்பட்டார். அக்கட்சியின் விதிகளின் படி, தேசிய தலைவரின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள். 2023ல் நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில், 2024 லோக்சபா தேர்தலையொட்டி நீட்டிக்கப்பட்டது. தற்போது வரை, பா.ஜ.,வுக்கு புதிய தேசிய தலைவர் நியமிக்கப் படவில்லை.
இந்நிலையில், பா.ஜ., தேசிய தலைவர் பதவிக்கான தேர்தல், டில்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், 37 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்துமே, செயல் தலைவர் நிதின் நபினை தேசிய தலைவராக முன்மொழிந்திருந்தன. வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், பா.ஜ.,வின் தேசிய தலைவராக நிதின் நபின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பா.ஜ., தலைமை அலுவலகத்தில் இன்று நடக்கும் விழாவில், அக்கட்சியின் தேசிய தலைவராக நிதின் நபின் முறைப்படி பொறுப்பேற்க உள்ளார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பாஜகவின் தேசிய தலைவராக பதவியேற்றார் நிதின் நபின். பதவியேற்பு விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு