செம நியூஸ்! 5 வருஷத்துக்கு மின்சார வரி கிடையாது - தமிழக அரசின் 'வெற்றி சோலார்' திட்டம்!
நாடு முழுதும் உள்ள வீடுகள், தொழில் நிறுவனங்களின் மின் கட்டண செலவை குறைக்க, சூரியசக்தி மின் நிலையத்தை அமைத்து, அதில் உற்பத்தியாகும் மின்சாரத்தை பயன்படுத்துமாறு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கோரிக்கை தங்கள் கட்டடங்களில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, மானியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்குமாறு, தமிழக அரசுக்கு தொழில்முனைவோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து, 'வெற்றி சோலார் திட்டத்தின் கீழ், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்களை அமைக்கும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு, மின்சார வரி விலக்கு வழங்கப்படும். 'இதற்காக, தகுதியுள்ள நிறுவனங்களுக்கு மின்சார வரி விலக்கு வழங்கும் அறிவிப்பை வெளியிட, மின் துறை ஆய்வு மேற்கொள்ளும்' என, எரிசக்தி துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 சதவீதம் வரி ஆலைகள் மின் பயன்பாட்டு கட்டணத்தில், 5 சதவீதம்; சொந்த பயன்பாட்டிற்காக மின் நிலையம் அமைத்துள்ளவர்கள் உபரி மின்சாரத்தை மூன்றாம் தரப்பினருக்கு விற்கும் போது மின் பயன்பாட்டு கட்டணத்தில், 5 சதவீதமும் மின்சார வரி வசூலிக்கப்படுகிறது. மேலும், சொந்த மின் உற்பத்தி நிலையங்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை பயன்படுத்தும்போது யூனிட்டிற்கு, 10 காசு மின்சார வரி விதிக்கப்படுகிறது.