×

#BREAKING : புதிய யு.ஜி.சி. விதிமுறைகளுக்கு உச்சநீதிமன்றம் தடை..!

 

ஜாதி, மத ரீதியிலான பாகுபாட்டை தடுத்து, சம வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் உயர் கல்வி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது. ஜன.14ம் தேதி இந்த விதிகள், யுஜிசி இணையதளத்தில் வெளியானது.யுஜிசியின் இந்த புதிய விதிமுறைகள், தவறாக பயன்படுத்தப்படும் வாய்ப்புகள் அதிகம் என்று கூறி மாணவர்கள் தரப்பில் கடும் எழுந்தது. விதிகளை திரும்ப பெற வலியுறுத்தி டில்லி, லக்னோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந் நிலையில்,எந்த பாகுபாடும் இருக்காது, சட்டத்தை யாரும் தவறாக பயன்படுத்த முடியாது என்று யுஜிசி விதிமுறைகள் குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார்.அவர் மேலும் கூறியதாவது; புதியதாக அறிவிக்கப்பட்ட யுஜிசி விதிமுறைகள் நியாயத்தை உறுதி செய்யவும், தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கும் உருவாக்கப்பட்டு உள்ளன. அனைவரின் உரிமைகளையும் பாதுகாப்பதில் அரசு உறுதி பூண்டுள்ளது. எந்தவித பாகுபாடும் இருக்காது, யாரும் தவறாக பயன்படுத்த முடியாது.இவ்வாறு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.

இந்நிலையில் ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய யு.ஜி.சி. விதிமுறைகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. 2012-ல் பிறப்பிக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. சாதிய பாகுபாடுகளை களையும் வகையில் யூசிஜி கொண்டு வந்த புதிய வழிமுறைகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.