#BREAKING : மின்சார ரெயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு; பயணியின் தலையில் காயம்..!
பெருங்களத்தூர்-தாம்பரம் இடையே இன்று காலை மின்சார ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. தாம்பரம் அருகே ரெயில் வரும்போது, தண்டவாளம் அருகே நின்ற சில மர்ம நபர்கள் ரெயில் மீது கற்களை தூக்கி வீசினார்கள். இந்த சம்பவத்தில் 1 பயணி காயம் அடைந்தார். உடனடியாக அடுத்த ரெயில் நிலையத்தில் இறக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
பார்த்திப கண்ணன்(26) என்கிற பயணியின் தலையில் காயம் ஏற்பட்டதால் தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த ரெயில்வே போலீசார், சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு, கல்வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். சமீப காலமாக, ரெயில்கள் மீது கற்களை வீசும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனால், பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். கல்லெறி சம்பவங்களை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.