#BREAKING : தமிழகத்தில் அடுத்த நடைபெறும் தேர்தலில் எனது கட்சி போட்டியிடும் - அண்ணாமலை..!
பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய அமைப்பு பொது செயலர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரை சந்தித்து, கட்சியில் இருந்து விலகும் முடிவை தெரிவித்தார் அண்ணாமலை. தற்போது பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் ராஜினாமாவை பாஜ தலைமை ஏற்றுக் கொண்டுள்ளது.இன்று மதியம், 12:00 மணி அளவில், சமூக வலைதளங்கள் வாயிலாக, உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும் அண்ணாமலை இருக்கிறார் என தகவல் வெளியானது.
இந்நிலையில் தற்போது அண்ணாமலை நேரலையில் பேசிக்கொண்டு வருகிறார், அதில் அவர் பேசிய முக்கிய தொகுப்புகள் இதோ
புதிய அரசியல் இயக்கம் என முடிவெடுத்துள்ளேன். என்னுடைய பாதை வேறு என பாஜக மேலிடத்திடம் தெரிவித்துள்ளேன். தமிழர் பண்பு என்பதால் பாஜக தலைமையிடம் சொல்லிவிட்டு ராஜினாமா செய்துள்ளேன்.
ஒரு புதிய அரசியலை, அடிப்படை கட்டமைப்பை மாற்றக் கூடிய அரசியலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பாஜகவில் இருந்து ராஜினாமா செய்தேன்.18 ஆண்டுகளாக புதியபாதையை உருவாக்க போராடி கொண்டிருக்கிறேன் என கூறினார்.தமிழகத்தில் அடுத்த நடைபெறும் தேர்தலில் எனது கட்சி போட்டியிடும்.
பாஜக உடன் கடந்த 18 மாதங்களாக கருத்து வேறுபாடு நீடித்தது. கடந்த டிசம்பர் 4ம் தேதியே பாஜகவில் இருந்து விலகுவதை தெரிவித்துவிட்டேன்
தேசிய கட்சிகள் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வதில்லை என்று பா.ஜ.கவில் இருந்து விலகிய அண்ணமலை கூறினார். தமிழ்நாடு குறித்த தனது பார்வையும் பாஜக மூத்த தலைவர்களின் பார்வையும் ஒன்றாகவில்லை. 18 மாதங்களாக எனது அதிருப்தியை தெரிவித்து வந்தேன். அரசியலில் நான் நுழைந்ததற்கான காரணத்தை நிறைவேற்றும் சரியான தருணம் வந்துள்ளது. எனது மொழியின் பெருமை, கலாசாரத்தின் சிறப்பு ஆகியவற்றோடு எனது பிராந்தியத்தின் நலனும் முக்கியம் என்றார்.
An Important Announcement https://t.co/IcEnfaZGRK
— K.Annamalai (@annamalai_k) June 5, 2026