☰
×

#BREAKING : தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமை அரசு விடுமுறை..!!

 

தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதனால், அதற்கு முந்தைய நாளான, சனிக்கிழமை சேர்த்து, வழக்கமான வார இறுதி விடுமுறை போல முடிந்துவிடும்.

மேலும், இந்த ஆண்டு தீபாவளி அன்று அமாவாசை வருவதால், பலர் அன்று அசைவ உணவுகளைத் தவிர்த்து, மறுநாள் அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடுவார்கள். சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் தீபாவளி அன்றே இரவு பணியிடங்களுக்குத் திரும்புவதும் சிரமமாக இருக்கும்.

எனவே, பொதுமக்களும் அரசு ஊழியர்களும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக தீபாவளியைக் கொண்டாடி, சிரமமின்றி பணியிடங்களுக்குத் திரும்பும் வகையில், நவம்பர் 9-ந்தேதி திங்கட்கிழமையும் அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தீபாவளிப் பண்டிகை நவ.8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், பண்டிகைக்கு மறுநாளான நவ. 9-ம் தேதி திங்கள்கிழமையும் அரசு விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு இன்று (அக்.28) அரசாணை வெளியிட்டுள்ளது. மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்தினருடன் பண்டிகையை கொண்டாடிவிட்டு சிரமமின்றி திரும்புவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.