#BREAKING : பெரும் சோகம் : கார் விபத்தில் அமைச்சர் மகள் பலி..!!
ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள மெரைன் டிரைவ் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கொடூர சாலை விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதிகாலை சுமார் 3 மணியளவில், அதிவேகமாக வந்த வெள்ளை நிற கார் ஒன்று, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் வீரியத்தில் கார் முற்றிலும் நொறுங்கியது. இதில் காரில் பயணித்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் சார்த்தக் அகர்வால், நமன் குப்தா, வன்ஷிகா கண்டேல்வால் மற்றும் ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் தீபிகா பாண்டே சிங்கின் மகளான இஷ்டிகா சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவத்திற்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் இர்பான் அன்சாரி ஆகியோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.