×

#BREAKING : அஞ்சலை அம்மாள் பெயரில் விருது - அமைச்சர் வினோத்..! முதல் பரிசு ரூ.2.50 லட்சம் வழங்கப்படும்..!

 

மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றி பெறும் விவசாயிக்கு மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் பெயரில் விருது வழங்கப்படும்.

இதில் முதல் பரிசு பெறும் விவசாயிக்கு ரூ.2.50 லட்சம் வழங்கப்படும். இரண்டாம் பரிசாக ரூ. 1.50 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.1 லட்சமும் வழங்கப்படும்.சிறு, குறு விவசாயிகள் இதில் கலந்து கொள்ளலாம்.

தகுதிகள்: சிறு, குறு விவசாயிகள் கம்பு, கேழ்வரகு, துவரை, உளுந்து, பச்சைப்பயறு மற்றும் நிலக்கடலை குறைந்தது 2 ஏக்கரில் சாகுபடி. தினை, சாமை, குதிரைவாலி, எள் குறைந்தது 1 ஏக்கரில் சாகுபடி.செய்யும் விவசாயிகளும் இதில் கலந்து கொள்ளலாம் என்றும் அறிவித்தார்.