×

#BREAKING : செல்போன்கள் எடுத்துச் செல்ல விதிக்கப்பட்ட தடையில் விலக்கு - அமைச்சர் ரமேஷ்..!!

 

இந்து சமய அறநிலையத்துறை சார்பாக தமிழ்நாட்டில் உள்ள 52 பெரிய கோயில்களுக்குள் பக்தர்கள் செல்ஃபோன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் செல்ஃபோனை கோயிலுக்கு வெளியில் வைத்து செல்வதற்காக பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்பட்டது. அண்மை காலமாக கோயில்களுக்குள் அதிகரித்து வரும் ரீல்ஸ் கலாச்சாரமே இதற்கு காரணமாக சொல்லப்பட்டது.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட சில கோயில்களில் ஏற்கனவே இந்த நடைமுறை இருந்து வருகிறது. பாதுகாப்பு பெட்டகத்தில் செல்ஃபோனை வைக்க ரூ.5 கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது. தவெக ஆட்சியில் இந்த நடைமுறை 52 கோயில்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு பக்தர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

இந்நிலையில் கோயில்களில் செல்போன்கள் எடுத்துச் செல்ல விதிக்கப்பட்ட தடையில் சிலருக்கு விலக்கு அளிக்கப்படுவதாக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள அவர், கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளுடன் வருவோர், மாற்றுத்திறனாளிகள் கோயிலுக்குள் செல்போன் எடுத்தச் செல்வதை தடுக்க வேண்டாம் என கூறியுள்ளோம்.

வசூலிக்கப்படும் ரூ.5 கட்டணம் குறித்து தவறாக விமர்சிக்கப்படுகிறது. அந்த பணம் ஊழியர்களுக்கு சம்பளமாகவும், அன்னதானத்திற்கும் பயன்படுத்தப்படும் என கூறினார்.