#BREAKING : உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் - அமைச்சர் அறிவிப்பு..!
மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் அல்லது மின் கலங்களால் இயங்கும் உபகரணங்கள் ரூபாய் 4கோடியில் வழங்கப்படும்.
1.உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் அல்லது மின்சாரத்தால் இயங்கும் வாகனம் வழங்கப்படும் என மகளிர் நலன் மற்றும் சமூக நலத்தறை அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று அறிவிப்புகளை வெளியிட்ட அவர், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு பள்ளிகள், ஆரம்ப நிலை பயிற்சி மையம் தொடங்கப்படும். தனித்துவ அடையாள அட்டை பயன்படுத்தி அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணமாக செல்ல வழிவகை செய்யப்படும். பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை 2 மடங்காக வழங்கப்படும் என்றார்.
2. அரசு நிதியுதவியுடன், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் கூடுதலாக மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான 10 இல்லங்கள் ரூ.1.82 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
3. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வாயிலாக அரசு நிதியுதவியுடன் கூடுதலாக மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சியுடன் கூடிய 10 இல்லங்கள் ரூ. 1.77 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
4. முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக அரசு நிதியுதவியுடன், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் கூடுதலாக இரண்டு இல்லங்கள் ரூ.0.49 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
5. அறிவுசார் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கென கூடுதலாக 3 ஆரம்பநிலை பயிற்சி மையங்கள், புறஉலக சிந்தனையற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கென கூடுதலாக 2 ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள், செவித்திறன் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கென கூடுதலாக 1 ஆரம்ப நிலை பயிற்சி மையம் என மொத்தம் 6 ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் ரூ. 0.97 கோடி நிதி ஒதுக்கீட்டில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும்.
6. கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் மனநலம் அறிவுசார் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக, மொத்தம் 100 பயனாளிகள் பயன்பெறும் வகையில், 1.5 ஏக்கர் பரப்பளவில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீட்டில் இரண்டு இல்லங்கள் கட்டப்படும். இவ்வில்லங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்படும்.
7. தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) பயன்படுத்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் (Benchmark Disability) மற்றும் தனியாக செல்ல இயலாத துணையாளர் மாற்றுத்திறனாளிகள் ஒருவருடன் அரசுப்போக்குவரத்து கழகங்களின் மாநகர / நகர தாழ்தளப் பேருந்துகள், (Express), LSS, டீலக்ஸ் (Deluxe), புறநகர் (Mofussil) மற்றும் மலைப்பகுதிகளில் சாதாரண கட்டண பேருந்துகளில் (குளிர்சாதன பேருந்துகள் நீங்கலாக) கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.
8.செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மெய்நிகர் கற்றல் (Virtual Reality Learning) முறையில் கற்பிக்கும் திட்டம் ரூ.0.64 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்.
9.பார்வை மாற்றுத்திறனாளி மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் வாசிப்பாளர் உதவித்தொகையினை இரு மடங்காக உயர்த்தி வழங்கப்படும்
ஆகிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.