#BREAKING : தேமுதிக-விலிருந்து மீசை ராஜேந்திரன் திடீர் விலகல்….!!
தேமுதிக-வின் முக்கிய நிர்வாகியான மீசை ராஜேந்திரன், கட்சியில் இருந்து விடுவிக்குமாறு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
கேப்டன் மன்றத்தில் 31 ஆண்டும், கட்சியில் 21 ஆண்டும் உழைத்த தனக்கு, இந்தச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தேமுதிக சார்பில் மூன்று முறை தேர்தலில் போட்டியிட்ட மீசை ராஜேந்திரனுக்கு, இந்த முறை தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படாததால் அவர் கடும் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. விஜயகாந்தின் வலது கரமாகப் பார்க்கப்பட்ட ஒரு விசுவாசி இப்போது கட்சியிலிருந்து விடைபெற்றது தேமுதிக-வுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படும் நிலையில், "விஜயகாந்தின் உண்மையான தளபதி விலகிவிட்டார் என சமூக வலைதளங்களில் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.