#BREAKING: மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் தள்ளுமுள்ளு.. பக்தர்கள் காயம்..!!
17 ஆண்டுகளுக்கு பின் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில், லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பர் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இன்று காலை, 7:40 மணி முதல், 8:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை தரிசிக்க 9,000 பேர் கோவில் மேல் தளத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். காலை, 10:00 மணிக்கு மேல் பொது தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
முன்னதாக, நேற்று கோவிலின் பரிவார மூர்த்திகள் எனப்படும், இதர தெய்வ சன்னிதிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இன்று அதிகாலை, 12வது கால யாகசாலை பூஜைக்கு பின், புனித நீர் புறப்பாடு நடக்கிறது.
காலை, 7:40 மணிக்கு அம்மன், சுவாமி தங்க விமானங்கள், ராஜகோபுரங்களுக்கும், காலை, 7:55 மணிக்கு அம்மன் சன்னிதிக்கும், காலை, 8:10 மணிக்கு சுவாமி சன்னிதிக்கும் கும்பா பிஷேகம் நடக்கிறது.
போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் 6,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் இன்று இரவு, 10:00 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இரவு வரை கோவிலை சுற்றியுள்ள சித்திரை, ஆவணி, மாசி வீதிகளில் வாகனங்கள் செல்வதற்கும், நிறுத்துவதற்கும் அனுமதி இல்லை. மதுரை நகருக்குள் சரக்கு, கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை. லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று முதலே மதுரையில் குவிந்து வருகின்றனர்.
இதற்கிடையே, மகா குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற்று வரும் சூழலில், பக்தர்களிடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. சிறப்பு அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி என போலீசார் அறிவுறுத்தியும், அதைப் பொருட்படுத்தாத பக்தர்கள் இரும்புத் தடுப்புகளைத் தகர்த்துக்கொண்டு உள்ளே ஓடினர். கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு சில பக்தர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு
பக்தர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு..! அனுமதி சீட்டு இருந்தால் மட்டுமே மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அனுமதி ஏன காவலர்கள் கூறியும் இரும்பு தடுப்பை தகர்த்து ஓடிய பக்தர்களில் ஒரு சிலருக்கு லேசான காயம்#Madurai | #MeenakshiAmmanTemple | #Temple | #Festivel | #Crowd |… pic.twitter.com/73dDxJzwTM
— Polimer News (@polimernews) September 17, 2026
பக்தர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு..! அனுமதி சீட்டு இருந்தால் மட்டுமே மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அனுமதி ஏன காவலர்கள் கூறியும் இரும்பு தடுப்பை தகர்த்து ஓடிய பக்தர்களில் ஒரு சிலருக்கு லேசான காயம்#Madurai | #MeenakshiAmmanTemple | #Temple | #Festivel | #Crowd |… pic.twitter.com/73dDxJzwTM
— Polimer News (@polimernews) September 17, 2026