#BREAKING: மகளிருக்கு மாஸ்.! இனி வாரந்தோறும் "சிறப்பு கடன் முகாம்கள்".. தமிழக அரசு அதிரடி..!!
தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ஆண்டிற்கான ரூ.1லட்சத்து 80 ஆயிரம் கோடி கடன் வழங்கும் இலக்கை எய்திடும் வகையில், வாரந்தோறும் சிறப்புக் கடன் முகாம்கள் மற்றும் கடன் மேளாக்களை நடத்த கூட்டுறவுத்துறையின் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் சிங்கப்பெண்கள் கடன்கள் மற்றும் வீட்டு வசதிக் கடன்களுக்கான சிறப்பு முகாம்களும், வெள்ளிக்கிழமைகளில் இதர முன்னுரிமைத் துறைக் கடன் திட்டங்களுக்கான சிறப்பு முகாம்களும் நடத்தப்பட உள்ளன.
இச்சிறப்பு முகாம்களில் நடுத்தர கால விவசாயக் கடன்கள், ஊரகத் தொழில் கடன்கள், வீட்டு வசதிக் கடன்கள், வீட்டு அடமானக் கடன்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன்கள், திருநங்கையருக்கான கடன்கள், மின் ஆட்டோ கடன்கள் மற்றும் இதர முன்னுரிமைத் துறைக் கடன் திட்டங்களின் கீழ் தகுதியான பயனாளிகளுக்குக் கடனுதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இக்கடன் முகாம்கள் குறித்த விவரங்கள் பொதுமக்களைச் சென்றடையும் வகையில், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, கூட்டுறவுக் கடன் திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுடைய பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் நடைபெறும் சிறப்புக் கடன் முகாம்கள் குறித்த விவரங்களை அறிந்து, உரிய ஆவணங்களுடன் பங்கேற்றுப் பயன்பெறலாம். மேலும், விபரங்களுக்கு 9884000845 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.