×

#BREAKING : பூந்தமல்லி அரசு உதவி பெறும் பள்ளியில் வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி..!

 


பூந்தமல்லியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம் போல் உணவை உட்கொண்ட மாணவர்களில் 17 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலை உணவு பொங்கலில் பல்லி கிடந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த உணவைச் சாப்பிட்ட 17 குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.