×

#BREAKING : அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி: கமலா ஹாரிஸ் திட்டம்..!!

 

அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு உள்ளது, என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்விகமாக கொண்டவர் கமலா ஹாரிஸ். அமெரிக்கா அரசியலில் பல்வேறு பதவிகளை வகித்த இவர் அதிபர் ஜோ பைடன் ஆட்சிக்காலத்தில் துணை அதிபராக பணியாற்றினார். கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இந்நிலையில், ரெவரெண்ட் அல் ஷார்ப்டனால் நிறுவப்பட்ட குடிமை உரிமைகள் அமைப்பான நேஷனல் ஆக்ஷன் நெட்வொர்க்கின் கூட்டத்தில் கலந்துகொண்ட ஹாரிஸிடம், அவர் மீண்டும் போட்டியிடப் போகிறாரா என்று ரெவரெண்ட் ஷார்ப்டன் நேரடியாகக் கேட்டார்.

2028-ல், “அமெரிக்க மக்களுக்காக” ஜனாதிபதியாக யார் சிறந்த பணியைச் செய்ய முடியும் என்ற கண்ணோட்டத்தில் போட்டியிடுவதைப் பரிசீலிப்பதாக ஹாரிஸ் மேலும் கூறினார்.

அடுத்ததாக வரும் 2028-இல் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது