×

#BREAKING : உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூரியகாந்த் நியமனம்..!!

 

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வரும் நவம்பர் 23 ஆம் தேதி ஓய்வுபெற உள்ள நிலையில் அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்குமாறு பி.ஆர். கவாய்க்கு மத்திய சட்ட அமைச்சகம் அண்மையில் கடிதம் எழுதியது.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற மரபுப்படி தனக்கு பிறகு மூத்த நீதிபதியாக உள்ள சூர்ய காந்தின் பெயரை 53-வது தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பரிந்துரை செய்துள்ளார்.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூரியகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய தலைமை நீதிபதி சூரியகாந்த், 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை இந்த பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.ஆர்.கவாயின் பரிந்துரையை ஏற்று சூரியகாந்தை புதிய தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ளார்.