×

#BREAKING : விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பணியிட மாற்றம்..!!

 

விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்து வந்த நீதிபதி எழிலரசி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சுஜாதா என்ற நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணைக்காக இன்று நேரில் ஆஜராகுமாறு விஜய்க்கு ஏற்கனவே நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருந்தது.

இரு தரப்பு வழக்கறிஞர்களும் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், இருவரும் பரஸ்பரம் பிரிந்து விடுவது என சுமூக முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. வாழ்நாள் ஜீவனாம்சம், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான சொத்து பாகப்பிரிவினைகள் குறித்தும் ஏற்கனவே பேசி முடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் பணிகள், பாதுகாப்பு காரணங்களாலும் விஜயும் சங்கீதாவும் காணொலி காட்சி வழியாக நீதிமன்றத்தில் ஆஜராவார்கள் என கூறப்பட்டது. இந்த நிலையில் தான் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணை வரும் ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இருவரின் விவாகரத்து வழக்கு முடிவுகள் என்ன வரும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மாற்றம் செய்யப்பட்டுளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்ற நீதிபதி எழிலரசி விழுப்புரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

எழிலரசி மாற்றப்பட்டதிற்கு வழக்கமான நீதிமன்ற செயல்முறை என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தாலும், விஜய், சங்கீதா இருவரும் காணொளி காட்சி மூலம் ஆஜராவதற்கு ஒரே நாளில் அனுமதி அளித்ததால் மாற்றப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.