#BREAKING : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பருக்கு சொந்தமான 4 இடங்களில் ஐடி ரெய்டு..!
செந்தில் பாலாஜியின் நண்பரான எம்சிஎஸ் சங்கர் ஆனந்த் என்பவருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட்ட நான்கு இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்குப் பெருமளவில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகத் தேர்தல் ஆணையத்திற்குப் புகார்கள் குவிந்தன. இதன் அடிப்படையில், வருமான வரித்துறையினர் கடந்த ஒரு வாரமாக கரூரின் பல்வேறு பகுதிகளில் கிடுக்கிப்பிடி சோதனைகளை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே திமுக வேட்பாளர் தியாகராஜன் மற்றும் அவருக்குத் தொடர்புடைய ஏற்றுமதி நிறுவனங்களில் ஐந்து நாட்களாகச் சோதனைகள் நடந்த நிலையில், இன்று அதன் அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்கியுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரும், பிரபல அரசு ஒப்பந்ததாரருமான எம்.சி. சங்கரின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இரண்டு அலுவலகங்களில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
செந்தில் பாலாஜியின் நண்பர்களான 'கொங்கு மெஸ்' மற்றும் 'சக்தி மெஸ்' ஆகிய உணவகங்களின் அலுவலகங்களிலும் ஒரே நேரத்தில் அதிகாரிகள் நுழைந்து சோதனையிட்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் சிவா டெக்ஸ்டைல் உள்ளிட்ட பல இடங்களில் ஏற்கனவே வருமான வரி சோதனை நடைபெற்ற நிலையில், இன்று மேலும் 4 இடங்களில் சோதனை நடைபெறுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.