☰
×

#BREAKING: இனி 8 கிராம் தங்க நாணயம் & ஒரு பட்டுப் புடவை வாங்க இது கட்டாயம்..!!

 

திருமணமாகும் இளம் பெண்களுக்கு 1 சவரன் தங்கம், 1 பட்டுப்புடவை வழங்கும் 'அண்ணன் சீர்' திட்டத்திற்கு ஆதார் கட்டாயமாக்கித் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஆதார் இல்லாதவர்கள் அதற்கு முதலில் விண்ணப்பித்த பிறகே இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும். அவ்வாறு ஆதார் அட்டை கைவசம் இல்லாதவர்கள், விண்ணப்பித்த பதிவு ரசீதுடன் பான் கார்டு உள்ளிட்ட அனுமதிக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஒன்றின் நகலை இணைத்து விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அண்ணன் சீர் என்று திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கப்படும் என வாக்குறுதி கொடுக்கப்பட்டது.

அரசாணையில் இந்த திட்டத்தில் 8 கிராம் (22 காரட்) தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை சீர் வரிசையாக வழங்கப்படும்.

இதற்காக இத்திட்டத்தின் முதற்கட்டச் செயலாக்கத்திற்காக தமிழக அரசு ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

மணப்பெண்ணின் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். (தேர்தல் வாக்குறுதியில் இது ரூ.5 லட்சமாக அறிவிக்கப்பட்டு, அரசாணையில் ரூ.2.5 லட்சமாக மாற்றப்பட்டுள்ளது)

இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இணையவழி (Online) மூலம் மட்டுமே பெறப்படும்.

இதற்கென பிரத்யேக இணையதளம் விரைவில் தொடங்கப்படும்.

இத்திட்டம் குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் சமூக நலத்துறை மூலம் தனியாக வெளியிடப்படவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.