×

#BREAKING : இன்றே கடைசி நாள்..? நீட்டிப்பு கிடையாது..! உடனே வருமான வரி தாக்கல் செஞ்சிடுங்க..! 

 

வருமான வரி தாக்கல் செய்ய இன்று செப்டம்பர் 15ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.இன்றைய தேதிக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றால், வருமானத்திற்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படும்.வழக்கமாக இந்தியாவில் ஜூலை 30ஆம் தேதி வரை வரை தான் வருமானவரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அரசு வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான தேதியை செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்தது. வழக்கத்தை விட சம்பளதாரர்களுக்கு இந்த முறை 45 நாட்கள் கூடுதலாக அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை மறுத்துள்ள வருமான வரித்துறை செப்டம்பர் 15ஆம் தேதி தான் ஐடிஆர் தாக்கல் செய்ய கடைசி நாள், இதற்கான தேதி எதையும் நாங்கள் நீட்டிக்கவில்லை, போலி செய்திகளை கண்டு மக்கள் ஏமாற வேண்டாம் உடனடியாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்யுங்கள் என எக்ஸ் பக்கத்தில் விளக்கம் தந்துள்ளது.

 வருமான வரி சட்டத்தின்படி ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் கொண்ட நபர் தாமதமாக வருமான வரி கணக்கினை தாக்கல் செய்யும்போது ஆயிரம் ரூபாயை அபராதமாக செலுத்த வேண்டும். இதுவே ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் கொண்ட நபர் என்றால் 5 ஆயிரம் ரூபாயை அபராதமாக செலுத்த வேண்டி இருக்கும்.

ஐடிஆர் தாக்கல் செய்வது எப்படி?

வருமான வரி இணையத்தளத்தில் ஆன்லைன் மூலம் ஐடிஆர் தாக்கல் செய்யும் பிராசஸை முடிக்கலாம். உங்கள் யூசர் ஐடி மற்றும் பாஸ்வோர்ட் பயன்படுத்தி வருமான வரி இ-ஃபைலிங் போர்ட்டலில் லாகின் செய்யுங்கள்.

அதில் "File Income Tax Return" என்ற பிரிவுக்கு செல்லுங்கள். அதில் 2025-26 ஆண்டு என்பதைத் தேர்வு செய்யவும். அங்கு individual, HUF என பல ஆப்ஷன்கள் இருக்கும். அதில் உங்களுக்கு எந்த ஆப்ஷன் பொருந்துமோ தேர்வு செய்யவும்.

அடுத்து வருமானம் குறித்த தகவல்களை பதிவிடவும். ஏற்கனவே இதில் இருக்கும் சம்பளம், டிடிஎஸ், வங்கி வட்டி உள்ளிட்ட தகவல்களைச் சரிபார்க்கவும்.

பிறகு ITR படிவத்தை (ITR-1 முதல் ITR-4) தேர்வு செய்ய வேண்டும். அனைத்து தகவல்களையும் செக் செய்து உறுதிப்படுத்தி, நிலுவையில் உள்ள வரிகளைச் செலுத்தவும். பிறகு ஆன்லைனிலையே வருமான வரி ரிட்டர்னை தாக்கல் செய்யவும்.