#BREAKING : இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி..!
இந்தியக் கொடி இடம்பெற்றுள்ள கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல அனுமதிப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா- இஸ்ரேல் நடத்திய தாக்குதலை அடுத்து, ஈரான் தன் வசமுள்ள ஹோர்முஸ் நீரிணையை கச்சா எண்ணெய் கப்பல்கள் கடக்க தடை விதித்தது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில், ஈரான் அமைச்சர் அரகாச்சியுடன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு, இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி இடையேயான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, புஷ்பக் மற்றும் பரிமல் எனும் இரண்டு எண்ணெய் கப்பல்கள், ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்ததாக கூறப்படுகிறது. கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இரண்டு இந்திய கப்பல்கள் அந்த எல்லையை கடந்து இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதேநேரம், தாய்லாந்து கப்பலுடன் வந்த கப்பலை, ஈரான் ராணுவம் தாக்கியுள்ளது.