☰
×

#BREAKING : இன்ஸ்டா பிரபலம் ராஜஸ்ரீ ஜெய்சன் காலமானார்..!!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையிலும் துணிச்சலாக போராடி வந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் ராஜஸ்ரீ ஜெய்சன் சிகிச்சை பலனின்றி உயி*ழந்தார்

இன்ஸ்டாகிராமை அதிகமாக பயன்படுத்தும் பலர் ராஜஸ்ரீயின் மோட்டிவேஷன் வீடியோக்கள் பார்த்திருக்க வாய்ப்பு இருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களாக புற்றுநோயால் போராடிக் கொண்டிருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் சிரித்த முகமாகவே வீடியோக்கள் வெளியிடுவார்.

தன்னுடைய கணவனுடன் வெளியே செல்லும் வீடியோக்கள் மற்றும் குழந்தைகளுடன் விளையாடுவது, தன்னுடைய தோழிகளுடன் அரட்டை அடிப்பது என்று வீடியோக்கள் வெளியிடுவார். அதுபோல வாழ்க்கையில் சோர்ந்து இருக்கும் இளைஞர்களுக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் அவருடைய பேச்சுக்கள் இருக்கும். பெண்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் வகையிலும் வீடியோக்கள் வெளியிட்டுக் கொண்டிருப்பார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையிலும் துணிச்சலாக போராடி வந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் ராஜஸ்ரீ ஜெய்சன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடினமான சூழலிலும் தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் இருப்பது எப்படி என தனது அனுபவங்களை வீடியோக்களாக வெளியிட்டு, பலருக்கும் ஊக்கமளித்து வந்தார். இந்த நிலையில், அவரது மறைவு சமூக வலைதள பயனர்கள், பின்தொடர்பவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடைசி சிரிப்பு.. மரண*த்தை முன்பே அறிந்த ராஜ ஸ்ரீ ஜெய்சன்... கலங்க வைக்கும் கடைசி நிமிடம்! #RajashreeJaison #RajashreeJaisonRIP #Speaker #Cancer #RIP #CancerPatients #thambitamilmedia https://t.co/7d08SO3Ryg

— THAMBITAMILMEDIA (@THAMBITAMIL2025) November 10, 2026