#BREAKING : விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1..!
ஹைதராபாதை தலைமையிடமாகக் கொண்டு, 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' நிறுவனம் செயல்படுகிறது. 'விக்ரம்- எஸ்' என்ற ராக்கெட்டை 2022ல் வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பிய நம் நாட்டின் முதல் தனியார் நிறுவனம் என்ற சாதனையை இந்நிறுவனம் பெற்றது. அதை தொடர்ந்து தற்போது சிறிய செயற்கைக்கோள்களை புவி சுற்று வட்ட பாதையில் நிலைநிறுத்தும் திறன் கொண்ட 'விக்ரம்- 1' என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது.
இதை சோதனை முயற்சியாக ஏவ, அதற்கான பணிகள் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் நடந்தன. இந்நிலையில் இன்று (ஜூலை 18) காலை 11.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.இந்த ராக்கெட் 350 கிலோ எடை வரை சுமக்கும் திறன் உடையது. அதிக உந்துவிசை கொண்ட திட எரிபொருள் ராக்கெட் பூஸ்டர்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. முதல் பயணத்தில் 450 கி.மீ., உயரத்தில் 60 டிகிரி சாய்வு கொண்ட சுற்றுப்பாதையில் செயற்கைக்கோளை நிலைநிறுத்த இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
காலை 11:30 மணிக்கு விண்ணில் ஏவப்பட்ட இருந்த நிலையில் தொழில்நுட்ப காரணமாக புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.12:05 மணிக்கு செலுத்த முடிவு செய்யப்பட்டது.35 நிமிடங்கள் ஒத்திவைத்து சரியாக 12:05 மணிக்கு ஏவப்படும் என அறிவிக்கப்பட்டது
இந்நிலையில் சற்று முன் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1.சதிஷ் தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து விக்ரம் 1 ஏவப்பட்டது.
விக்ரம் 1 மூலம் Grahaa Space, Cosmoserve, Dcubed ஆகிய தொழில்நுட்ப கருவிகள் விண்ணுக்கு செல்கின்றன