×

#BREAKING : உதயநிதி கைதுக்கு தடை கோரிய வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு..!!

 

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது தொடர்பான வழக்கு விசாரணை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உதயநிதி மீது 12 மணி வரை நடவடிக்கை எடுக்க வேண்டாம் என காலையில் நீதிமன்றம் தெரிவித்த நிலையில், அதனை மீறி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கு விவரம் நீதிமன்றத்தில் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை.

உதயநிதி கைது தொடர்பான ஆவணங்கள் வரவில்லை என விசாரணையை ஒத்திவைத்தார் நீதிபதி இளந்திரையன்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில்

பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணை எடுக்கபடும் என தகவல் வெளியாகியுள்ளது