#BREAKING : உலகம் முழுவதும் Google Chrome வேலை செய்யவில்லை..!!
Updated: May 12, 2026, 11:18 IST
இன்டர்நெட் உலகில் ஜாம்பவானாகத் திகழும் கூகள் கிரோம் திடீரென வேலை செய்யாததால் கோடிக்கணக்கான பயனர்கள் அவதிகுள்ளாகியுள்ளனர்.
உலகில் அதிக பேரால் பயன்படுத்தப்படும் கூகள் கிரோம் இன்று காலை முதல் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல பயனர்களுக்கு "சர்வர் பிழை. மன்னிக்கவும், உங்கள் கோரிக்கையைச் செயல்படுத்தும்போது ஒரு உள் சர்வர் பிழை ஏற்பட்டதாகத் தெரிகிறது. எங்கள் பொறியாளர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் அவர்கள் சிக்கலைத் தீர்க்கப் பணியாற்றி வருகின்றனர். தயவுசெய்து பின்னர் மீண்டும் முயற்சிக்கவும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பிரச்சனை பயனரின் தரப்பில் இருந்து ஏற்படவில்லை என்றும், கூகிளின் சர்வர்களில் இருந்துதான் உருவானது என்றும் அந்த எச்சரிக்கை சுட்டிக்காட்டியது.