×

#BREAKING : குட் நியூஸ்..!! ஒரேயடியாக குறைந்த தங்கம் மட்டும் வெள்ளி விலை..!!

 

தங்கம் விலை இந்தாண்டு தொடக்கம் முதல் சுமார் 72% வரை உயர்ந்துள்ளது. அமெரிக்க பணவியல் கொள்கை, டாலர் பலவீனம், புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் மத்திய வங்கிகள் தொடர்ச்சியா தங்கத்தை வாங்கி குவித்தது ஆகியவை இதற்குக் காரணமாகும். தங்கத்தை மிஞ்சும் அளவுக்கு வெள்ளி விலையும் இந்தாண்டு உயர்ந்தது. வெள்ளி விலை இந்தாண்டு சுமார் 181% உயர்ந்துள்ளது..

தங்கம் விலை இந்த மாதம் ஜெட் வேகத்தில் உயரத் தொடங்கி புதிய உச்சத்தைத் தொட்டது.

இந்தச் சூழலில் தான் இன்றைய தினம் தங்கம் விலை சென்னையில் கணிசமாகக் குறைந்தது. 

 

22K ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.420 குறைந்து ரூ.12,600க்கும், ஒரு சவரனுக்கு ரூ.3,360 குறைந்து ரூ.1,00,800க்கும் விற்பனையாகிறது

 

. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.27 குறைந்து ரூ.254க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.27,000 குறைந்து ரூ.2,54,000க்கும் விற்பனையாகிறது.