#BREAKING : ஒரே நாளில் 2-வது முறையாக உயர்ந்து ஷாக் கொடுத்த தங்கம் விலை..!
தங்கம் விலை கடந்த வாரம் வரை தொடர்ந்து குறைந்து நகை வாடிக்கையாளர்களை மிகவும் உற்சாகப்படுத்தியது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, தங்கம் மீது முதலீடு செய்யவும், நகை வாங்கவும் திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் தற்போது தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது.
தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வந்த நிலையில், கடந்த 26, 27 மற்றும் 28-ந்தேதிகளில் சற்று உயர்ந்திருந்தது. 29-ந்தேதி ஒரு கிராம் ரூ.13,195-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 30-ந்தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.155 குறைந்து ஒரு கிராம் ரூ.13,040-க்கும், சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,04,320-க்கும் விற்பனையானது. 31-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,480 குறைந்து ரூ.1,01,840-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.310 குறைந்து ரூ.12,730-க்கும் விற்பனையானது.
நவம்பர் 1-ந்தேதி ஒரு சவரன் ரூ.1,01,840-க்கும், ஒரு கிராம் ரூ.12,730-க்கும் விற்பனையானது. 2-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.1,02,200-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.12,775-க்கும் விற்பனையானது. நேற்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,02,400-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.12,800-க்கும் விற்பனையானது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,02,600-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.12,825-க்கும் விற்பனையான நிலையில் தற்போது மீண்டும் சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து ரூ.1,04,800-க்கும், கிராமுக்கு ரூ.275 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று காலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ.200-க்கு விற்பனையான நிலையில் தற்போது வெள்ளி விலை உயர்ந்துள்ளது. வெள்ளி விலை ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.210-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்
3-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,400
2-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,200
1-11-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,01,840
31-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,01,840
30-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,320
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்
3-11-2026- ஒரு கிராம் ரூ.200
2-11-2026- ஒரு கிராம் ரூ.200
1-11-2026- ஒரு கிராம் ரூ.200
31-10-2026- ஒரு கிராம் ரூ.200
30-10-2026- ஒரு கிராம் ரூ.210