#BREAKING: தங்கம் விலை அதிரடியாக குறைந்தது..!!
Sep 21, 2026, 09:50 IST
செப்டம்பர் மாதம் தொடங்கியதிலிருந்தே ஒரு நாள் விலை கூடினால் அடுத்த நாள் குறைகிறது. ஒருசில நாட்களில் காலை, மாலை என இருவேளை விலை மாற்றம் கண்டு வருகிறது.
கடந்த வார இறுதியில் தங்கம் விலை ரூ.2,000-க்கும் மேல் உயர்ந்து அதிர்ச்சி அளித்த நிலையில், இந்த வாரத் தொடக்கத்தில் விலை குறைந்து மக்களுக்கு சற்று நிம்மதியைத் தந்துள்ளது.
இந்நிலையில், இன்று ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.14,270-க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.1,14,160-க்கும் விற்பனையாகிறது.
அதேவேளையில் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,60,000 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது.