×

#BREAKING : தங்கம் விலை மிகப்பெரிய அளவில் குறைந்தது..!!

 

மிடில் கிளாஸ் மக்கள் எல்லாம் இனி தங்கம் வாங்கவே முடியாது என்கிற நிலைக்கு தங்கம் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 

கடந்த டிசம்பர் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 4 ஆம் தேதி ஒரு சவரன் ரூ 96,160-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 30-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 1,00,800- க்கு விற்பனையானது.

 

சென்னையில் ஜனவரி 30-ஆம் தேதியான நேற்று தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 7,600 குறைந்து ரூ. 1,26800க்கு விற்பனையாகி வருகிறது. தங்கம் கிராமிற்கு ரூ. 950 குறைந்து 15,850க்கு விற்பனையாகிறது.

இந்நிலையில், இன்று (ஜன.31) 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹950 குறைந்து ₹14,900-க்கும், சவரனுக்கு ₹7,600 குறைந்து ₹1,19,200-க்கும் விற்பனையாகிறது. இதனால் நகைப்பிரியர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.350க்கும், கிலோவுக்கு ரூ.55,000 குறைந்து ரூ.3.50 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது