×

#BREAKING : தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 உயர்வு..!!

 

சென்னையில் நேற்று ஜனவரி 25-ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு சவரன் ரூ 1,18,000 -க்கும், ஒரு கிராம் ரூ. 14,750க்கும் விற்பனையானது. அது போல் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ 365-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ 3,65,000-க்கும் விற்பனையானது.

இன்று தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

22K ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.275 உயர்ந்து ரூ.15,025க்கும், சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து ரூ.1,20,200க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் வரலாறு காணாத வகையில், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.375க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ரூ.3,75,000க்கு விற்பனையாகிறது.